பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩2& இலக்கிய வகையின் வளர்ச்சியும் (1) படிமம் : கவிதைப் பொருளை அப்படியே பட்டவர்த்தனமாக மனக்கண் முன்னர்க் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றலுடையது படிமம். புதுக்கவிதை யின் உயிரே இந்தப் படிம உத்தி. (எ-டு) இருட்டைப் பிழிந்து எடுத்து வைத்ததுபோல் படுத்திருந்தது ஆட்டுக்குட்டி காலை நேரம்." 2. குறியீடு : புதுக்கவிதையின் முக்கியமான உத்தி இது. கவிதைப் பொருள்களை அழகுபடச் சொல்லுவதற்கு-எழிலுடன் எடுத்து இயம்புவதற்குப்பெரிதும் இந்த உத்தி பயன்படுகின்றது. எடுத்துக் காட்டுகள் சில தருவேன். (1) பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுத்த காவல் நிலையம். 2. திருவல்லிக்கேணி ᎥᏞiff ©6ᏡᎢ தின்று விட்ட தமிழ்க்கரும்பு. இவை இரண்டும் பாரதி ஒரு பிள்ளையார் சுழி என்ற கவிதையொன்றிலுள்ள குறியீடுகள். காவல்நிலையம், தமிழ்க் கரும்பு இவை பாரதிக்கு குறியீடுகளாக நின்று 15. புவியரசு : சிநேக புஷ்பங்கள் 15. வாலி : பொய்க்கால் குதிரைகள்.