பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் . i31 அடிகளில் அமைந்து ஐங்கு று நூறில் உள்ள கவிதை கள் போல் அழகும் கருத்தாழமும் கொண்டு திகழ் கின்றன. மூன்று எடுத்துக்காட்டுகள் தருகின்றேன். 1) புறத்தினை சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம் கையில் மாலையுடன் குருட்டுத் தமயந்தி"

ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயக நாடகத்தைச் சித்திரிக்கின்றது. இச்சிறு கவிதை. அரசியல் எத்தர்கள் போலி நளன்களாகவும், :திருவாளர் பொதுமக்கள் குருட்டுத் தமயந்தியாகவும் காட்டப் பெறும் நேர்த்தி நம்மை மகிழ்விக்கின்ற்து.

(2) இரவிலே வாங்கினோம்; இன்னும் விடியவில்லை: நாட்டு விடுதலைப்பற்றிப் பாடப் பெற்றுள்ள புகழ் வாய்ந்த இக்கவிதையின் சுருக்கத்தின் மிகு பலத்தைக் காணலாம். (3) மனைவி' என்ற கவிதையில் வரும், குடும்ப ஆட்சியைப் பிடிப்பதற்காகதாய்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்த தனிக் கட்சி... 20. அப்தில் ரகுமான் : பால் வீதி 21. அரங்கநாதன், ஏ : விதி 22. வாலி : பொய்க்கால் குதிரைகள்