பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 32 இலக்கிய வகையின் வளர்ச்சியும் ஒரு மாநில அரசு அளவிலேயே தன் மணாளனை நடத்திக் கொண்டிருக்கும், மத்திய அரசு! என்ற பகுதிகள் சுருக்கத்திற்கு நல்ல எடுத்துக் காட்டுகள். உள்ளடக்கம் : இலக்கியம் இலக்கியத்திற்காகவே", கலை கலைக்காகவே' என்ற கொள்கைக் குரல்கள் ஒய்ந்து போய்விட்டன. இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கிய மாகாது என்ற உண்மை ஞானம் தட்டுப்பட்டு விட்டது. இன்று வாழ்க்கையின் திறனாய்வே கவிதை' என்ற அங்கீகாரம் பெற்றுவிட்டது; "கவிதை சமூகத் திற்காகவே என்ற முடிவுக்கு வந்துவிட்டது இலக்கியத் திறனாய்வு. சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழி கோலுவதும் வழிகாட்டு வதும் இலக்கியத்தின் இயல்புகள் என்பன ஏற்றுக் கொள்ளப் பெற்ற முடிவுகள். புதுக்கவிதை படைப் போர் இவற்றை நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் புதுக்கவிதையின் உள்ளடக்கம் மரபுக் கவிதையின் உள்ளடக்கத்தினின்றும் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துவிட்டது. சுதந்திரம்.ஜனநாயகம்.ஜனநாயகச் சோஷலிசம், அரசியல், உழைப்பவர் உலகம், வறுமை, கல்வியின் நிலை, சமுதாயத்தின் இழிவான நிலை போன்றவை பாடு பொருளாக அமைந்துவிட்டன. காதல் உணர்வும் முருகுனர்வும் முதலிடம் பெற்றன. மார்க்சியக் கொள்கை வழியிலும், தனிமனிதத் தத்துவ நோக்கிலும்,நகைச்சுவை சிண்டல் எள்ளல் போக்கிலும்