பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 133 கவிதைகள் மழைக்காலக் கொசுக்கள் போல் உற்பத்தி யாகிக் கொண்டிருக்கின்றன. நாள், வார, பிறை, திங்கள் இதழ்களிலெல்லாம் புதுக்கவிதை இடம் பெற்றுவிட்டது. கால நெருக்கடியால் இவற்றிற்கு அதிகமாக எடுத்துக்காட்டுகள் தர இயலவில்லை. என்னுடைய புதுக் கவிதையின் போக்கும் கோக்கும்’ 'பாட்டு த திறன்' (ஸ்டார் பிரசுரம்) என்ற நூல்களில் கண்டு மகிழ்க, எனினும் ஒன்றிரண்டு கவிதைகளை ஈண்டுக் காட்டுவேன். (எ-டு) (1) வ்றுமையின் தத்துவம் சமய வாதிகளுக்கு பிரசங்கத் தலைப்பு குருவி ஜோசியக்காரனுக்கு வயிற்றுப் பிழைப்பு கலாசிருஷ்டி யோடு எழுது பவனுக்கு நிலாச் சோறு கல்லூரி மாணவனுக்கு-வெறும் பரீட்சைக் கேள்வி: ஆதி சிவனையே 'ஆண்டி'யாகப் பேசும் நமது நாட்டில் வறுமையின் தத்துவம் ஏன் நிலைக்காது? (2) இன்று சமுதாய விரோதியாகக் கருதப் பெறு பவன் வியாபாரி. இவனைப் பற்றிய கவிதை: பதுக்கிய மூட்டைகள் சூறையாடப் பெற்றபின் தனியே கிடந்தது இவனது சடலந்தான்.