பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13& இலக்கிய வகையின் வளர்ச்சியும் பற்றிய அருவருப்பான இயல்புணர்ச்சிகளையும் படிமம், குறியீட்டு உத்திகளின் மூலம் வடித்தெடுத்துக் கொடுப்பதே இக்கொள்கையின் அடிப்படையில் எழுந் இலக்கியத்தின் உள்ளடக்கமாகும். நடை முறை வாழ்க்கையைத் திட்டமிட்டு மிகைப்படுத்தி காட்டுவது இவ்வகை இலக்கியத்தின் போக்காக அமைகின்றது. சி. மணியின் பச்சையம் வரும் போகும்', நரகம்’ என கவிதைகளை இக்கொள்கை யினை விளக்குவனவாகும். பாலுணர்ச்சி கூட்டிப் பச்சையாக எழுதுகின்றார் கவிஞர் என்று சிலர் கூறும் குற்றச் சாட்டுக்குக் கவிஞர் (சி. மணி) கூறும் எதிர்ப்புதான பச்சைய என்ற கவிதை”. அவருடைய சீற்றம் உணர்ச்சி வேகத்துடன் உருவம் பெறுகின்றது. பாலுணர்ச்சியைப் பச்சையாக எழுத்தில் படைக்கக் கூடாது என்ற குற்றப் பத்திரிகை வாசிப்பவர் யாவர் என்ற வினாவிற்கு விடைதரும் பாங்கில் கவிதையின் முற்பகுதி அமைகின்றது. வாலை இளநீரை வாய் வழியால் வாரிப் பருகும் இவர்கள் இளமை கொடுக்கும் துணிவில் இடித்துக் களிக்கும் இவர்கள் வயது வழங்கிய வாய்ப்பில் அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள் இருவரைக் கட்டிலேற ஊதி முழக்கி ஊர்கூட்டும் இவர்கள் இருளில் ரகசியமாய் வெட்கி 23. மேலும் விவரங்களை விரும்புவோர் இவ வாசிரியரின் புதுக்கவிதை-போக்கும் நோக் கும்" (கழகம் சென்னை-18) பக் 425.430 காண்க. 24. வரும் போகும்’-என்ற தொகுப்பில் காண்க.