பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இலக்கிய வகையின் வளர்ச்சியும் கின்றனர் என்பதையும் குறிப்பிட்டேன். பாக்களின் சுவையறிந்து நுகர்வது மிகவும் இன்றியமையாதது என்பதையும் வாழ்க்கையில் காண்பது சுவை அல்ல வென்றும், காவியத்தில், நாடகத்தில், நாட்டியத்தில் கவிதையில் காணப்படுவதுதான் சுவை என்பதையும் உணர்த்தினேன். - - வரையறுக்கப் பெற்ற ஒலிநயமே யாப்பு என்பதை நாம் அறிவோம். சொற்கள் யாப்பு முறைப்படி ஒருவித வரிசையில் அமையுங்கால், அவை ஒன்றோடொன்று புதிய முறையில் செல்வாக்குப் பெற்றுத் தாம் இருக்கும் இடத்தையொட்டி புவை வேகத்தையும் புதுப் பொருள் களையும் பெறுகின்றன என்றும், இதற்கு எடுத்துக் காட்டாக சதுரங்கக் காய்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உலவுங்கால் பெறும் ஆற்றலையும், துப்பாக்கியினுள்ளே வைக்கப் பெற்ற தோட்டாக்கள் பெறும் ஆற்றலையும் சுட்டி உரைத்தேன். இது Potential Energy. பழைய பாக்களில் கலிப்பா ஒசை நயம் மிக்கது என்றும், ஒரு காலத்தில் கலியும் பரிபாட்டும் செல்வாக் குடன் திகழ்ந்தன என்பதையும் அவை காதல் உணர்ச் சியைப் பெருக்கிக் காட்டுவதற்குப் பெரிதும் பயன் படும் என்பது தொல்காப்பியர் கருத்தாகும் என்றும் குறிப்பிட்டேன். பழைய பாக்களை மட்டிலும் கொண்டு உணர்ச்சிக்கேற்றவாறு பாட்டின் ஒசைகளை வேறுபடுத்திக் காட்ட இயலாமையால் அவற்றை ஈடுபடுத்துவதற்காகப் பிற்காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்கள் தோன்றின என்பதைச் சுட்டி உரைத்தேன். இவற்றுள் ஆசிரியத் தாழிசை முதன் முதலாகச் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதை யம், ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் ஆழ்வார் பாசுரங்களில் இடம் பெற்றமையையும், எடுத்துக் காட்டுகளால் விளக்கினேன்.