பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 145 வெண்பா இனமான வெண்செந்துறை அல்லது செந்துறை வெள்ளை குறட்டாழிசை, வெண்டாழிசை, செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள், வெளி விருத்தம் ஆகிய வகைகள் பிறந்தன என்று சுட்டிக் காட்டினேன். அடுத்து கலிப்பா இனமாக கலித் தாழிசை, கலித்துறை, (கலிநிலைத்துறை , கட்டளைக் கலித்துறை (கோவைக் கலித்துறை), கட்டளைக் கலிப்பா, கலி விருத்தம் என்றவை. தோன்றியமையைக் குறிப்பிட்டேன். ஆழ்வார் அருளிச் செயல்களில் ஏராளமான பாசுரங்கள் கலி நிலைத்துறையாலும், கலி விருத்தத்தாலும் அமைந்துள்ளன என்பவற்றை எடுத்துக்காட்டினேன். வஞ்சிப்பா இனமாக வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்ற வகைகள் தோன்றின என்றும், இவை நம்மாழ்வார் அருளிச் செயல்களில் காணப் பெறு கின்றன என்றும் சுட்டி உரைத்தேன். பொதுவாக அகர்வால் இனிபகம், இராம கிருஷ்ணா இனிப்பகம் போன்றவற்றில் ஏராளமான இனிப்பு வகை கள் கிடைப்பனபோல் பாவினங்கள் தோன்றிய பிறகு புலவர்கட்கு பல்வேறு இலக்கிய விருந்து வகைகள் வைப்பதற்கு எளிதாயிற்று என்பதைக் காட்டினேன். இவை எல்லாம் அடிவரையறை உள்ளவையாகும். இவற்றுள் தாழிசையைக் கையாண்டு பரணி இலக்கியங் களும், கட்டளைக் கலித்துறையைக் கையாண்டு கோவை இலக்கியங்களும், விருத்தத்தைக் கையாண்டு சிந்தாமணி, இராமகாதை, பெரியபுராணம் போன்ற பெருங்காப்பியங்களும் தோன்றித் தமிழ்ச் செல்வமாகத் திகழ்கின்றன என்பதைப் பெருமிதத்துடன் விளக் கினேன். ஆங்காங்குச் சித்திரக் கவிதைகளும் தோன்றி யதையும் நினைக்கலாம். இ-10