பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இலக்கிய வகையின் வளர்ச்சியும் 1930-க்குப் பிறகு புதுக்கவிதை தோன்றி தமிழ் இலக்கிய உலகைக் கலக்கி விட்டது என்றும், அக்கவிதைகள் தெருத் தெருவாக மிட்டாய் வண்டிகள் வந்து சிறுவாகளின் கவனத்தை ஈர்ப்பது போல், நாள்-வார-பிறை-திங்கள் இதழ்களில் புதுக்கவிதை கள் தவறாது தரிசனம் தந்து கொண்டிருக்கின்றன் என்றும் விளக்கினேன். கீதை, இராமகாதை போன்ற பேரிலக்கியங்களும் புதுக்கவிதை கோலத்துடன் வெளி வந்துள்ளன என்றும், அண்மையில் வெளிவந்துள்ள கவிஞர் வாலியின் அவதார புருஷன்” என்ற பேரிலக்கியம் குறிப்பிடத்தக்கது என்றும் சுட்டினேன். இங்ங்னமாக தமிழ் இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்’ என்ற தலைப்பில் உங்களு டன் இலக்கிய விருந்தில் பங்கு கொண்டதைப் பெரும் பேறாகக் கொண்டு பெருமிதம் அடைகின்றேன். இதற் கெல்லாம் வழியமைத்துத் தந்த தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் வில்லன்” (கோதண்டராமன்) அவர் கட்கும், பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவையோருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்துகின்றேன். 'என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலர் திருவாக்கைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியப் பணிபுரிந்து வரும் அடியேன், காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதம் கண்ணிலொற்றி நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாது நல்ல் வினைகள் செய்து உன் கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெமக்க்ே என்ற பாரதியாரின் கலித்துறை பாடலையும்,