பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 வைணவச் செல்வம் என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995-ல் 575 பக்கத் தில் வெளிவந்துள்ளது; இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. 1996 பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழக தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடு களின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்கு நராகப் பணியாற்றுபவர். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச். டி) பட்டம் .ெ ப ற் ற வ ர். (அந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் 940 பக்கங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது; பல எம்ஃபில், பிஎச். டி. மாணவர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம் உள வியல் (5), இலக்கியம் (21), சமயம், தத்துவம் (31) வாழ்க்கை வரலாறு தன்-வரலாறு(11) திறனாய்வு(19), அறிவியல் (18), ஆராய்ச்சி (6) ஆக : 1.11 நூல்களின் ஆசிரியர், இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும்; சமய நூல்களில் மூன்றும்; திறனாய்வு நூல்களில் ஒன்றும்; தமிழக அரசுப் பரிசுகளையும்; அறிவியல் நூல்களில் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றன. இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக்கோன்' என்ற விருதையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டி, பண்ணுருட்டி வைணவ மாநாடு நீசட கோபன் பொன்னடி என்ற விருதையும் (1987), தமிழ்ப்பணியைப் பாராட்டி தமிழக அரசு திரு. வி. க.