பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 விருதையும் (10000 வெண்பொற்காசுகள் - 1987) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'த மி ழ் ப் பேரவைச் செம்மல் (1991) விருதையும்; இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறை களில் இவர்தம் பணியைப் பாராட்டி இராசா. சர். முத்தைய வேள் விருதையும் (1994 - 50000வெண்பொற் காசுகள்) சென்னைக் கம்பன் கழகம் இவர்தம் கம்பன் பணியைப் பாராட்டி பேராசிரியர் இராதா கிருஷ்ணன் விருதையும் (1994 - 1000 வெண் பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் 'இராமாநுசர் விருது' (1996 - 25,000 வெண்பொற் காசுகள்) வழங்கிச் சிறப்பித்தன. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச்சிறப்புகளாகும்.