பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 7 புலவர்களும் தமிழ்ப் புலவர்களும் ஒன்றுபட முடியும் என்றும் நம்பினர். கிரந்த எழுத்தில் வடமொழி நூல் களையும் எழுதினர்; மணிப்பிரவாள நூல்களையும் எ ழு தி ன ர். மணிப்பிரவாளம் வளர்த்தவர்களின் நோக்கம் நல்ல நோக்கத்தான். தமிழ் நாட்டில் வீணான பிளவு ஏற்பட்டு அது வளர்வதையும் விரும் பாமல் அறிவுலகத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படுவதற்கு அது சிறந்த உதவியாகும். நோக்கம் நல்லதாக இருப்பினும் விரும்பிய பயன் ஏற்படவில்லை. ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வழிவழியாக ஊறி வளர்ந்து விட்ட மொழியின் தன்மையைப் படித்தவர் சிலர் சேர்ந்து முயற்சி செய்து மாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார் இலர். சிறந்த நோக்கம் கொண் கடதேயாயினும் மொழியின் இயல்புக்கு மாறானது. ஆகையால் அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. கம்பர் முதலான பெரும்புலவர்களும் பழைய இலக்கண இலக்கியங்கட்கு உரை எழுதிய உரையாசிரியப் பெரு மக்களும் அந்த முயற்சியைப் போற்றவில்லை. தமிழ் மொழியின் இயல்பை அறிந்து, உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தம் நூல்களைப் படைத்தனர். கம்பர் தனது இராமகாதையில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சமஸ்கிருதத்தின் ஒலியை விட்டுத் தமிழ் ஒலிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து எழுதினார். சில பெயர்களை அவ்வாறே தராமல் தமிழில் அவற்றின் பொருளை மொழிபெயர்த்துத் தந்தார். லட்சுமணனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன், என்றும், ஸ்பைர்ணனை - உவணன் என்றும்,