பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ இலக்கிய வகையின் வளர்ச்சியும் ஸ்வர்ணவண் ணனை - சுவனவண்ணன் என்றும் கனகமேனி என்றும், யக்ளுவிரோதனை - வேள்விப் பகைஞன் என்றும் அஹல்யாவை - அகலிகை என்றும் மொழி பெயர்த்துத் தமிழின் நீர்மை கெடாமல் பாது காத்தார். இவ்வாறு வடசொற்களை மிகுதியாகக் கலக்கும் முயற்சி நடைபெற்று வர, தேவையான வடசொற்களை மட்டும் தமிழ் ஒலிக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கும் முயற்சி மற்றொருபுறம் நடைபெற்றது. தமிழ்ச் சொற் களும் தமிழ் ஒலிகளும் காக்கும் முயற்சியே வாகை 莎母妲莎· பிற தொடர்பு : பத்தாம் நூற்றாண்டில் பல்லவர் களின் ஆட்சி வீழ்ச்சியுற்றது. சோழர்கள் மீண்டும் தலை யெடுத்தனர்; பெரிய வல்லரசாகவும் ஓங்கினர். பதின் ன்ேறாம் நூற்றாண்டில் அவர்களும் வீழ்ச்சியுற்றனர். இஸ்லாமியப் படையெடுப்பு நாட்டைக் கலக்கியது. விசய நகர ஆட்சியின் கீழ், நாய்க்க மன்னர்கள் தமிழ் காட்டில் செல்வாக்குப் பெற்றனர். தெலுங்குமொழி பேசுவோர் தமிழரோடு உறவு கொண்டனர் இன்று தமிழகத்திலுள்ள நாயுடுமார், இரட்டியர், இராசுக்கள் யாவரும் தமிழகத்தில் குடியேறியவர்; தமிழகத்தைத் தம் தாயகமாகவே கொண்டனர். தமிழ்நாட்டு ஆழ்வார் பாசுரங்கள் தெலுங்கில் இடம் பெற்றன. தமிழைத் தெலுங்கு எழுத்தில் எழுதிப் படிக்கத் தொடங்கினர். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் தெலுங்கு எழுத்தில் நாலாயிரத்தை வெளி யிட்டுள்ளார். அவருக்கு ஆந்திர மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் சீடர்கள் உள்ளனர்.