பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் g கன்னட மொழியில் தமிழ் நாயன்மார்களின் வரலாறுகள் எழுதப் பெற்றன. திராவிட மொழிகளுக் குள் நல்ல உறவு ஏற்பட்டது. கன்னட நூல்களான பிரபுலிங்க லீலை முதலானவை தமிழ் வடிவம்' "பெற்றன. மராட்டிய சரபோஜி மன்னர்கள் தஞ்சையைத் நலைநகராகக் கொண்டு ஒரு பகுதியை ஆண்டு வந்தார்கள். மராட்டியச் சொற்கள் சில தமிழ்ப், பேச்சில் கலந்தன, இஸ்லாமியரின் ஆட்சி ஏற்பட்டது. ஐதர் அலி, திப்புசுல்தான் ஆட்சி நமக்கு நினைவு வரும். ஆர்க்காட்டு நவாப்பு ஆட்சி சில காலம் நடைபெற்றது. இவர் ஆட்சிக் காலத்தில் பாரசீக அராபியச் சொற்கள் பல தமிழர் பேச்சிலும் ஆட்சித்துறையிலும் கலந்தன. அடுத்து, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் டச்சுக்காரர், போர்த்துக்கீசியர் (பறங்கியர்), பிரஞ்சுக் காரர், ஆங்கிலேயர் முதலானவர்களின் வாணிக உறவாலும் ஆட்சியாலும் ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் பல தமிழில் வந்து கலந்தன. அச்சு யந்திரம் வந்தது. உரைநடை வளர்ந்தது. வார பிறை, திங்கள் இதழ்கள் தோன்றி செய்திகள் விரைவில் பரவின, ஆங்கிலேயரின் ஆட்சி நம்நாடு முழுவதும் நிலைத்த பிறகு ஆங்கில மொழியின் வாயிலாக, ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வடிவங்களும் தமிழில் தோன்றலாயின. புதினங்கள். நாடகங்கள்: பிறகு சிறுகதைகள், அண்மைக் காலத்தில் புதுக் கவிதைகள் ஐரோப்பிய இலக்கியங்களைத் தழுவி தமிழில் இயற்றப் பெற்றன. இங்ங்னம் 1947இல் நாடு