பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 13 இயற்றப் பெற்றன. அவை ஆசிரியப்பா (அகவல்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பனவாகும். ஆசிரியம் வஞ்சி வெண்பா கலிபென நாலியற் றென்ப பாவகை விரியே. என்ற நூற்பாவில் குறிப்பிடுவர் ஆசிரிய தொல் காப்பியர். பாவின் இலக்கணத்தைச் செய்யுளியலில் 49 நூற்பாக்களில் விளக்கியுள்ளார். அவற்றை ஈண்டு விளக்கப் போவதில்லை. - ஆசிரியப்பா ஆசிரியப்பர இயற்சீரானும், ஆசிரிய உரிச்சீரானும் ஆசிரியத் தனையானும் அகவலோசையானும் நாற் சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது. ஆசிரியர் அறிவித்தல் போலப் பொருள்களை அறிவித்து நிற்றலால் ஆசிரியப்பா எனப்பட்டது. இதற்கு ஒர் எடுத்துக்காட்டு : வயல் வளம் பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை மரகதம் குவித்த வண்ணம் ஆயிற்று; மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி காணக் கண் கூசும் வயிரக் களஞ்சியம்! பரந்தளன் வயலை பார்த்துக்கொண் டிருந்தேன் மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்? * இது பாவேந்தரின் கவிதைகளின் வியர்வைக் கடல் என்ற தலைப்பில் உள்ள வயலைப் பற்றியது. 5. 6 工鑿 தி 101 (இளம்) . ഒു. ക്ലീ (101-149) 7. பா.த்ா. கவிதைகள் முதற்பகுதி 56 வியர்வைக் கடல். -