பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巢强 இலக்கிய வகையின் வளர்ச்சியும் இவ்வாசிரியப்பா அடிநிலையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பர் இளம்பூரணர். இந்த ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை : கேரிசை ஆசிரியம் : ஒர் ஆசிரியப்பாவில் ஈற் றயலடி (இறுதியடிக்கு முன்னது) முச்சீரால் அமைந் தால் அது நேரிசையாசிரியப்பா என்ற பெயர் பெறும். இதற்கு எடுத்துக்காட்டு : உருகிய நெய்யும் பருப்பும் இட்ட கோற்றுடன் மிளகுநீர் துளியள ஆற்றிச் சிறிய வள்ளத்தில் சேர்ந்தெடுத்துக் குழந்தைக் குக் காக்கை காட்டி விழுங்க வைப்பாள், மென்னகை முத்தே." இது பாவேந்தரின் குடும். விளக்கில் (நான்காம் பகுதி) நகைமுத்து குழந்தைக்குச் சோறுாட்டலைக் கூறுவது. இஃது ஈற்றயலடி முச்சீரால் வந்தமையால் நேரிசை யாசிரியப்பா. - 2. இணைக் குறள சிசியம் : ஒர் ஆசிரியப்பாவில் முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய், இடையடிகள் இரண்டும் பலவும் இரு சீரானும் மூச்சீரானும் (அதாவது குறளடியானும் சிந்தடியானும்) வரின் அஃது இணைக் குறளாசிரியப்பா எனப்படும். இதற்கு எடுத்துக் காட்டு : : - நீரின் தண்மையும் தீயின் செம்மையும் சாரச் சார்ந்து - 8. குடும்ப விளக்கு - நான்காம் பகுதி. (மக்கட் பேறு) -