பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - - 15 தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே. இதில் முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய், இடையடி இருசீரானும் முச்சீரானும் வந்தமையால் இணைக் குறளாசிரியப்பா ஆனது காண்க. - சிறியகட் பெறினே' (புறம்-235) என்று ஒளவையார் அதியமானின்மீது பாடியுள்ள பாடல் இடையிடையே இரு சீரடியும், முச்சீரடியுமாய் வருதலின் இணைக்குறளாசிரியப்பாவுக்கு எடுத்துக் காட்டாய் அமைந்து விடுகின்றது. 3. நிலைமண்டில ஆசிரியம் : ஒர் ஆசிரியப்பாவில் எல்லா அடியும் தம்முள் அளவொத்து நாற்சீரடி பல வருவது நிலை மண்டில ஆசிரியப்பா. இதற்கு எடுத்துக்காட்டு: . நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை அறிந்தோர் அனைவரும் வந்து வந்து தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும், தந்து சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன் அதையே பேசி அமர்ந்திரா ததுதான் மாவரசுக்கு வருத்தம் தந்தது" இதுவும் பாவேந்தர் குடும்ப விளக்கில் வருவது. மாவரசு - நகைமுத்துவின் தந்தை. இப்பாடலில் எல்லா அடிகளும் நாற்சீராக அளவொத்து வந்தமை யால் இது நிலை மண்டில ஆசிரியப்பா ஆயிற்று. 9. கு டு ம் ட விளக்கு-நான்காம் ப. கு தி (மக்கட் பேறு)