பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இலக்கிய வகையின் வளர்ச்சியும் என்று ஆசிரியர் ஒதினமையால், புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக் கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம்’ எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாடல்" எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். சம நிலை வெண்பாட்டு : . நாலடியால் வருவது சமநிலை வெண்பாட்டு அல்லது சமநிலை வெண்பா எனப்படும். அவற்றுள் இரண்டாம் அடியின் இறுதிக் கண் ஒரூஉத் தொடை பெற்று வருவதை நேரிசை வெண்பா எனவும், ஒருஉத் தொடை பெறாது வருவதை இன்னிசை வெண்பா எனவும் வழங்குவர். சமநிலை வெண்பாவை அளவியல் வெண்பா என்று வழங்குதலும் உண்டு. அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லை ஆறடி சிற்றெல்லை நான்கடி அளவியல் வெண்பா சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக் கினுள்ளும் முத்தொள்ளாயிரத் துள்ளும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற சான்றோரும். ஒளவைப் பாட்டியும் வாக்குண்டாம், நல்வழி ஆகிய நூல்களையும், குமரகுருபர் அடிகள் நீதிநெறி விளக்கத்தையும், சிவப்பிரகாச அடிகள் நன்னெறியை யும் சமநிலை வெண்பாவால் ஆக்கியுள்ளமை ஈண்டு நினைத்தல் தகும். கைக் கிளை : கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை; இப்பொருண்மைத்தாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனப்படும். கைக்கிளை ஆசிரியப் பாவால் வரப்பெறாது. அங்ங்னம் வரின் அது