பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இலக்கிய வகையின் வளர்ச்சியும் பரிபாடல், வெண்பா உறுப்பான் வருதலேயன்றித் தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள் இன்ன பா என்று அறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கு உரியதாகும் என்பர் ஆசிரியர். பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, மருட்பா என்று ஒதப்பெற்ற எல்லாப் பாவின் உறுப்பும் உடையதாதல். இங்ங்ணம் பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் விருத்தும் என்று சொல்லப்பெற்ற நான்கும் தனக் குறுப்பாகக் காமப் பொருள் குறித்து வரும் நிலையின் காகும் இது. மேலும், சொற்சீரடியும் முடுகியலடி 4ம் பரிபாடற்கு உரியவை என்பர் ஆசிரியர்.20 (எ-டு) பரிபாடலில் காண்க. வஞ்சிப்பா அஞ்சிப்பா ஆவது, வஞ்சி உரிச்சீரானும், ஏனைச் சீரானும் இருசீர் அடியானும் முச்சீரடி யானும் துள்ளல் ஒசையானும் வந்து தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இறுவது. இது குறள் சிந்தடி இல்லாத அடிகளையும், புறநிலை வாழ்த்து முதலிய பொருள்களையும் அமைந்து வரற்கொட்டாது வஞ்சம் புரிந்து நிற்றலால் வஞ்சி எனப்பட்டது. வஞ்சி -வஞ்சமுடையது. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச் சீரடி வஞ்சிப்பா என இரு வகைப்படும். - சுறமறிவன துறையெல்லாம் இறவீன்பன வில்லெல்லாம் மீன்றிரிவன கிடங்கெல்லாம் 13. செய்யு-நூற் 116 (இளம்) 19. டிை நூற் 117 (இளம்) 20. டிை-நூற் 118 (இளம்)