பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இலக்கிய வகையின் வளர்ச்சியும் நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் (22) என்று வருவது ஆசிரிய அடி. கோழி எறிந்த கொடுங்காற் கணங்குழை (23) என்று வருவது வெண்பா அடி. 'வயலாமைப் புழுக்குண்டும் - வரளடும்பின் மலர் மலைந்தும் (64-65) என்பன கலியடிகள். வஞ்சிப்பா ஆசிரிய நடையினை யுடையதாதலின், வஞ்சிப்பாவிற்கும் ஆயிரம் அடி மேல் எல்லையாகக் கொள்ளப்பெறும். கலிப்பா துள்ளல் இசையுடையதாய்த் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகளைப் பெற்று நடப்பது கலிப்பா எனப்படும். இது பொருளினாலும் இசையினாலும், எழுச்சியும் பொலிவும் வேகமும் பெற்று வருதலால் கலிப்பா' எனப்பட்டது. கலி. எழுச்சி, பொலிவு, வேகம். பா.செய்யுள். கலிப்பா கான்கு வகைப்படும் என்று கூறும் தொல் காப்பியம்." அவை ஒத்தாழிசைக்கலி, கலிவெண் பாட்டு, கொச்சகம், உறழ் கலி என்பவை. 1. ஒத்தாழிசைக் கலி : ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும். முதல் வகை : இது தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புடையதாகப் பயின்று வரும், தரவு : இது கலிப்பாவின் மற்றைய உறுப்பின் பொருள்களைத் தொகுத்துத் தந்து கலிப்பாவின் 22. செய்யு:நூற். 125 (இளம்)