பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 29 அமையுமாதலின் அதனை அம்போதரங்க ஒத்தாழி சைக் கலிப்பா எனவும் சொல்லுப' என்று உரைப்பர் போரசிரியர்.28 இக்கூறிய வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குத் தரவு நான்கும், ஆறும், எட்டுமாகிய நேரடியினால் வரும். இவ்வாறு இரட்டைப் படை அடியினால் வருதலின்றி ஐந்தும், ஏழும், ஒன்பதுமாக வாராது என்பது பேராசிரியர் முதலியோரின் கருத்தாகும். அடக்கியல் வாரம் தரவோடு ஒத்த இலக்கணத்தது. எண் என்பது, முத்ல் தொடுத்த உறுப்புப்பெருகிப் பின் தொடுக்கும் உறுப்பு சுருங்கிப் பலவாய் வருவது. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் - எண்னே28 என்று கூறுவர் ஆசிரியர். எனவே, இரண்டடி இரண்டும் ஒரடி நான்கும், இருசீர் எட்டும், முச்சீர் பதினாறும் ஆகி எண் பல்கும் என்பது. இருசிர் குறளடியுமாகலின் స్త్ర (Uు சீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்; ஆகலின் ஒழிந்த எண் மூன்றும் கூடியே எண்ணெனற் குரியனவாயின. இது நோக்கிப் போலும் எண்ணென்று அடக்காது, - சின்னமல்லாக்காலை (செய்யு. நூற். 146) என்று ஒரு சீரினை வேறு படுத்து மேற் கூறுகின்ற தென்பது. இனி அளவடியினை நாட் டி யே 'முதற்றொடை பெருகிச் சுருங்கும்' என்றமையின், அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்ன மெனப்படும்’ என்பர் பேராசிரியர். இனி, ஈரடியிரண் டினைப் பேரெண் எனவும் இவற்றிற்கும் பின்வரும் சின்னத்திற்கும் இடையே 25. செய்யு. நூற்-140 (பேரா) 26. டிெ நூற் 139 (இளம்)