பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இலக்கிய வகையின் வளர்ச்சியும் நிற்றலின் இருசிரை இடையெனவும், முடிவிற் அளவாய் நிற்கும் சின்னத்தினை அளவெண் எனவும் பெயர் கூறினும் அமையும்' என்பர் நச்சினார்க்கினியர். (ii) ஒருபோகு : இந்தக் கலியின் இயல்பும் இரு வகைப்படும். அவை (அ) கொச்சக ஒருபோகு (ஆ) அம்போதரங்க ஒருபோகு என்று இரண்டாக உணரப்படும். ஒருபோகு" என்ற தொடர் ஒர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள் படுவதாகும். ஒத்தாழிசைக் கலிக்கு ஒதிய உறுப்பு களுள் ஒருறுப்பு இழந்தமையால் 'ஒருபோகு" எனப் பெயராயிற்று. 'ஒருறுப்பு இழத்தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும்' என்று பேராசிரியர் கூறுதல்ால் (செய்யு. நூற், 147-இன் உரை) இப்பெயர்க்காரணம் ஒருவாறு புலனாதல் காணலாம், கொச்சகம், ஒருவழி வாராதது 'கொச்சக ஒருபோகு" ஆகும்; வண்ணகப் பகுதிக்குரிய எண்ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒரு வழி இல்லாதது 'அம்போதரங்க ஒரு போகு' எனப் பெயர் பெற்றது. 'கொச்சகவுடை போலப் பெரும் பான்மையும் திரண்டுவருவது கொச்சகம்’ எனவும் பல உறுப்புகளும் முனறயே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்கம்’ எனவும் கூறினார்' என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவது காண்க. (அ) கொச்சக ஒருபோகு : தரவு முதலான உறுப்புகளுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசை யின்றித் தரவு முதலியன உடைத்தாகியும், எணணாகிய உறுப்புகள்ை இன்டயிட்டுச் சின்னம்? என்ற தோர். 27. அம்போதரங்கச் செய்யுள்களுள் செய்யுள் களுக்குரிய நால்வகை எண்ணுறுப்புகளுள் இறுதி, எண்ணாய்ச் சிறுகி வரும் எண் "சிற்றெண் எனப்பெறும். இது சின்னம்’ எனவும் வழங்கப் பெறும்"