பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இலக்கிய வகையின் வளர்ச்சியும்

  "தீம்பால் கறந்த" (கலி-111) என்ற முல்லைக்கலி அயற்றளையால் வந்த வெண்கலிப்பா. 
    கொச்சகக் கலி : தரவாகிய உறுப்பும் சுரிதக மாகிய உறுப்பும் இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும், வெண்பா வின் இயல்பினால் புலப்படத் தோன்றும் பா நிலை வகை கொச்சகக் கலிப்பா' வாகும். .

தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந்தனரே:

   என்று விதி அமைத்துக் காட்டுவர் ஆசிரியர். ஆறு மெய் பெறுதலாவது: தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகியலடி என்னும் ஆறு உறுப்புகளையும் பெறுதல். இதற்கு அராகம்’ என்னும் உறுப்பைக் கூட்டி முடுகியல்' என்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் உண்டு. 'ஒத்தாழிசைக் (கலிக்)குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற் போலக் கொச்சகக் கவிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க’ என்று இளம்பூரணர் கூறுதலால், ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகையாய்க் கலியோசை தழுவிய கொச்சக ஒருபோகும், வெண்ப்ா வியலால் வெளிப்பட முடியும் கொச்சகக் கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்தல் வேண்டும். இவன் காட்டிய நூற்பாவின் முதல் மூன்றடியினை ஒரு நூற்பா வாகவும் கொண்டு பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறும் உரை ஏற்புடைத்தன்று.
          36. செய்யு-நூற். 148 (இளம்)