பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 39 உள்ளது. பின்னதில் தேவையான அளவிற்கு நுட்ப மாக விளங்குகின்றது, கவிஞனின் உணர்ச்சி யநுபவத்தைப் பெறுவதற்கு ஒலிநயம் துணை செய்வதைப் போல யாப்பும் துணை புரிகின்றது. பாட்டினைப் படிக்கும் போது மனம் அறிவு நிலையில் வேகமாக இயங்குவதில்லை; அஃது உணர்ச்சி வயப்பட்டுக் கற்பனையில் அறிதுயில் கொள்ளுகின்றது. இதனால்தான் நெடுந்தொலைவுப் பயணத்தில் கவிதை இலக்கியத்தை விரைவாகப் படிக்க முடிவதில்லை. பிள்ள்ைக் கனியமுதே-கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே அள்ளி அனைத்திடவே-என் முன்னே ஆடிவருந் தேனே (2) கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ந்தான் கள்வெறி கொள்ளளுதடி! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா உன்மத்த மாகு தடீ! (5) சொல்லு மழலையிலே-கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே எனது

    மூர்க்கந் தவிர்த்திடுவாய்" (8) என்ற பாடலடிகளைப் படிக்கும்பொழுது மனம் மெல்ல அதன் இசையில் ஈடுபடுகின்றது; ஓசை இன்பத்தில் திளைக்க விரும்புகின்றது. திரும்பத் திரும்ப அந்த அடிகளைக் கேட்க விரும்புகின்றது. குழந்தையின் சித்திரப் பேச்சு, அதன் தளர்நடைதழுவுவதால் பெறும் ஊற்றின்பம், மழலை மொழி, முல்லைச் சிரிப்பு ஆகியவை அனைத்தையும் மனம்
                   39.                 கண்ணம்மா-என் குழந்தை