பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 40 இலக்கிய வகையின் வளர்ச்சியும் உணர்ச்சியோடு அநுபவிக்கின்றது. சொற்கள். நெகிழ்ந்த யாப்பில், பழகு தமிழில் அமையும்போது இந்த அநுபவம் உச்சநிலையை அடைகின்றது. இந்த அநுபவமே பாவின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைகின்றது; அதற்கு வித்தும் இடுகின்றது. இவ்விடத்தில் ஒரு குழந்தையைத் தூங்க வைப்ப தற்கு ஒரு தாய் மேற்கொள்ளும் முயற்சியையும் சிந்திக்கலாம். அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்து சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே! முடத் தனத்தின் முடைநாற்றம் வீசுக்கின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! வெண்முகத்தில் நீலம் விளையாடிக் . கொண்டிருக்கும் கண்கள் உறங்கு கனியே உறங்கிடுவாய்!49 என்ற தாலாட்டுப் பாடலைப் பாடித் தொட்டிலை ஆட்டுவாள்; அல்லது குழந்தையை அருகில் கிடத்திக் கொண்டு அதன் முதுகை மெதுவாகத் தட்டுவாள். பாட்டின் ஒலி நயத்தைக் குழந்தை உணரத் தொடங்கியவுடன், அல்லது தொட்டிலின் ஒழுங்கான அசைவை அறிந்தவுடன், அல்லது அன்னையின் கை தன், முதுகைத் தட்டும் ஒழுங்கை உணர்ந்தவுடன் குதின் மனம் உறக்கத்தில் ஈடுபடத் தொடங்கு கின்றது; சிறிது நேரத்தில் கண்ணயர்கின்றது.

                   40.                              பாரதிதாசன் பெண் குழந்தைத் தாலாட்டு.