பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும், - 41 அங்ங்னமே பாட்டின் ஒலிநயமும், அதற்குத் துணையாக அமையும் யாப்பும் நம்மை நனவுலகத்தை விட்டுக் கற்பனையுலகத்திற்குக் கொண்டு செலுத்தும் சாதனமாக அமைகின்றது. உறக்கத்திற்குரிய சாதனங் களைப் பெற்றுப் பழகிய குழந்தை நாளடைவில் உறக்கம் வரும் போதெல்லாம் அவற்றை நாடும்: அங்ங்னமே, பாட்டைப் படிக்கும் நமது உள்ளமும் அறிவுலகத்திலிருந்து உணர்வுலகத்தை எட்டுவதற்கு அதற்கு ஏற்றதாகிய ஒலி நயத்தை நாடும் என்பதை நம் அநுபவத்தால் அறிகின்றோம். பசனைக் குழுவினர் 'காமாவளி’ பாடியும் தாளத்தைப் போட்டும் உச்ச நிலையை அடைந்து கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ முடிந்ததும், யாராவது ஒருவர் ஒரு விருத்தத்தை இராக ம. லினகயில் பாடுங்கால் அனைவர் உள்ளமும் அதில் ஒன்றி ஈடுபடுவதை நாம் காணலாம். உணர்ச்சிக்கேற்ற யாப்பு: பாடல்களில் உணர்ச்சிக் கேற்றவாறு யாப்பும் அமைந்து விடும். இதனால் பாட்டிற்கு உருவம் அல்லது வடிவம் இன்றியமையாத தாக அமைந்து விடுகின்றது. கடலைமா, சருக்கரை, நெய் ஆகிய பொருள்கள் ஒன்று சேர்ந்து இலட்டு, மைசூர்ப் பாகு போன்ற பல்வேறு இனிப்புப் பலகாரங் களாகின்றன. எல்லாம் இனிப்புச் சுவையில் அடங்கி னாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் சுவைக் கும் தன்மையுடையது. ஒவ்வொன்றிலும் அடங்கின பொருள்கள் யாவும் ஒரே மாதிரியாக இருப்பினும் அவை அமையும் முறையும் ஒழுங்கும் வேறுபட்டவை. அங்ங்னமே, கவிதையிலும் சொற்களும் உணர்ச்சியும் பொதுவாக இருப்பினும் அவை அமையும் யாப்பு முறை கவிதைக்குத் தனிச் சுவையைத் தருகின்றது. கவிதையி லுள்ள உணர்ச்சியும் யாப்பு வகைகளின் வேறு பாட்டால் தெளிவாகப் புலனாகின்றது. ஜாங்கிரி என்ற ஒரு பொருள் தெலுங்கு எழுத்துபோல் வளைந்து