பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இலக்கிய வகையின் வளர்ச்சியும்

              இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. உலகியற் செயல்களுள் நகை, உவகை முதலிய செயல் களில் இன்பம் உண்டாதல் போன்று அழுகை, இழிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உண்டாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. நான் பட்டப்படிப்பு படித்த காலத்தில் (1934-39) புனித சூசையப்பர் கல்லூரிக்கு எதிரிலுள்ள வானப் பட்டறை என்ற பகுதியில் தங்கியிருந்தேன். நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றிய காலத்தில் (1950-1960) அந்தப் பகுதியைச் சார்ந்த மாணவர் ஒருவர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். அது (1955-56) என்பதாக நினைவு. என்ன காரணத்தாலோ அவர்மீது தனிப்பாசம் ஏற்பட்டது. அவர் காரைக்குடியில் புகையிலை வாணிகர் ஒருவர் மகளைத் திருமணம் புரிந்து கொண்டவர்; மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள், தங்கியிருந்த இடம் இஸ்லாமியர் குடியிருப்பை யொட்டியிருந்த பகுதி. சுகாதாரக் குறைவான இடம். அப்பகுதியில் பெரியம்மை (Smalli-Pox) நோய் தோன்றியது, ஒரே வாரத்தில் என் அருமை மாணவரின் பிள்ளைகள் மூவரும் அம்மை நோயால் தாக்குண்டு ஒருவர் பின் ஒருவராக மரித்தனர். மாணவரும் அவர் துணைவியாரும் தப்பினர். இந்த நிகழ்ச்சியைக் கண்ட நான் அவலச் சுவையில் திளைத்ததாகச் சொல்ல முடியுமா? மாறாக நெஞ்சு வெடிப்பது போன்ற துக்கம் தான் ஏற்பட்டது. ஆனால் பத்தினி நல்ல்தங்காள் ஏழு பிள்ளைகளுடன் மரித்த கதையை நாடகத்தில் காணும்போது அழுது கொண்டே இன்பத்தில் திளைக் கின்றேன். மீண்டும் ஒருமுறை நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் உந்தப்படுகின்றேன். இதுவே அவலச் சுவை-அழுகைச் சுவை, -