பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 45

         இதனால்தான் சுவை இலக்கண நூலார் உலகியல் இன்பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்தி லாவது காவியத்திலாவது அச்செயல்கள் நிகழும் பொழுது அவற்றைக் காண்ட லும் கேட் டலும் செய்யும் நல்லறிவாளர் உள்ளத்தில் உண்டாகும் சுவையையே "ரலம்’ என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் இளம்கன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங் கால் நமக் குத் துயரம் உண்டாகின்றது. ஆனால் மேக நாதன் இறந்துபட்டபோது இராவணன், மண்டோதரி புலம்புவதாக உள்ள கம்பன் பாடல்களைப் படிக்கும் போது, அல்லது படிக்கக் கேட்கும்போது அளவிலா மகிழ்ச்சி உண்டாகின்றது. அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால் தான் அப்பாக்களைப் பன்முறைப் படித்தும் படிக்கக் கேட்டும் இன்புறுகின்றோம்.

3. பாவினங்களின் தோற்றம் வாழ்க்கை இயக்கமாக நடைபெறுகின்றது; அங் நனமே வாழ்க்கையிலிருந்து மலரும் இலக்கியமும் இயக்கமாகவே அமைகின்றது. இயற்கையில் நடை பெறும் அத்தனை இயக்கங்களும் ஒழுங்காகவே நடை பெறுகின்றன; சில நிலையான விதிகளுக்குக் கட்டுப் பட்டே நடைபெறுகின்றன. சாதாரணமாக ஒரு செயல் நடைபெறும் காலத்திற்குப் பிறகு அமைதி நில வும் காலமும் உண்டு; ஒர் அழுத்தம் (Stress), அதன் பிறகு ஓர் இடை நிறுத்தம் (Pause) என்ற முறையில் அது நடைபெறுகின்றது. இவ்வாறு ஒழுங்காக நடை ப்ெறும் இயக்கத்தைத்தான் ஒலிநயம் (Rhythm) என்று வழங்குகின்றோம். ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிடுவதற்கு உரை நடை - ஒலி நயம் போதுமானதன்று. அதற்குச் செய்யுள் - வடிவமே மிகவும் ஏற்றது. ரசஞ் ஞானி