பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகையின் வளர்ச்சியும் டி. .ே சி. இந்த வடிவம் மிகவும் இன்றியமை யாதது என்பதை அடிக்கடி வற்புறுத்தி விளக்கு வார். செய்யுள் வடிவத்தில் ஒலிநயம் அளவுடன் அமைகின்றது; அழுத்தங்க்ள் திரும்பத் திரும்ப நிகழ் வதும் ஒழுங்குடன் அமைகின்றது. இதைத் தெளிவாக அறிந்தால்தான் கவிதையைப்பற்றி நாம் கொள்ளும் கருத்து தவறாக அமையாது. செய்யுள்-ஒலி நயம் என்பது சாதாரணக் கருத்து வெளியீட்டின் மீது மேற் கொள்ளப்பெற்ற செயற்கை முற்ையன்று; இன்பமான ஒசையையோ அல்லது அழகான முடிவையோ உண்டாக்குவதற்கு மேற்கொள்ளப் பெற்றதுமன்று. அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த ஒரு சாதனமாகும். யாப்பு :

     செவிக்கு இனிமை பயக்கும் இந்த ஒலி நயத்தை கவிதையில் பயிலும் இப்பண்பை-வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் நம் முன்னோர். இந்த வாய்பாடுகள் அமை யும் முறையையே யாப்பு (metre) என்றும் பெயரிட்ட னர். வரையறுக்கப் பெற்ற ஒலிநயமே யாப்பு என்பது. கவிதையில் சொற்கள் யாப்பு முறைப்படி ஒருவித வரிசையில் அமையுங்கால் அவை ஒன்றோடொன்று புதியமுறையில் செல்வாக்குப் பெற்று தாம் இருக்கும் இடத்தையொட்டிப் புதுவேகத்தையும் புதுப் பொருள் களையும் பெறுகின்றன.

சதுரங்கக் காய்கள் ஒருகுறிப்பிட்ட எல்லைக்குள் உலவுங்கால் அவை புதிய ஆற்றலைப் பெறுவன போலவும், துப்பாக்கியினுள் இருக்கும் தோட்டாக்கள் புதியதொரு வேகத்தைப் பெறுபவன போலவும் கவிதையிலுள்ள சொற்களும் ஒருவித யாப்பு முறை யில் அமைந்து அவற்றிற்குரிய இடங்களிலிருக்கும் பொழுது புதிய ஆற்றலைப் பெறுகின்றன.