பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகையின் வளர்ச்சியும்

       கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்

என்ற நூற்பாவால் அறியலாம். இவை காதல் உணர்ச்சியைப் பெருக்கிக் காட்டுவதற்குப் பெரிதும் பயன்படும் என்பது தொல்காப்பியரின் கருத்துமாகும்.

      கலியோடு வழங்கிய மற்றொரு பாட்டு வஞ்சிப்பா என்பது. இவ்விரண்டிற்குமுரிய ஒசை முறையே துள்ளல், துரங்கல் என்பது. ஏனைய பாக்களை விட இவை இரண்டும் இசை இன்பம் மிக்கவை. எப்படியோ இவை செல்வாக்கு இழந்தன. வெண்பாவும் ஆசிரியப் பா இன்றுவரையில் போற்றப்பட்டு வருகின்றன.
      பண்டைய பாக்களில் சிலவகை ஓசை வேறுபாடு களே உள்ளன. இதனால் இப்பாக்களை மட்டிலும் கொண்டு தனிக்கவிதைகளையும் காவியங்களையும் பாடியவர்கள் உணர்ச்சிகளுக்கேற்றவாறு பாட்டின் ஒசைகளை வேறுபடுத்திக் காட்டுவதால் பெரிதும் வெற்றி பெறவில்லை; அப்பாக்களின் யாப்பு முறை களும் அதற்குப் போதுமானவையாக இல்லை. இவற்றை ஈடுபடுத்துவதற்காகப் பி. ற் கா ல த் தி ல் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றின. இவற்றைக் காண்போம்.

ஆசிரியப் வினம் : இதன் இனம் ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் என்பன வாகும். 1. ஆசிரியத் தாழிசை : மூன்றடியாய் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத் தாமிழிசை. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடையன. தனியே வரப்பெறுமாயினும் கொள்ளலாம். (எ-டு)

                                     43. தொல்-பொருள்-அகத்திணை-நூற் 59