பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இலக்கிய வகையின் வளர்ச்சியும் மூன்டடியானும் என்ற உம்மையால் நான்கடியா னும் வரப்பெறும் எனக்கொள்க. வெளி விருத்தம் (எ-டு) : கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்-என்செய்கோயான் வண்டு வழிபாட வார்தளவம் பூத்தனவால்-என்செய்கோயான் எண்டிசையும் தோகை இருந்தகவி ஏங்கின வால்-என்செய்கோயான் இது மூன்றடியால் என்செய்கோ யான் என்னும் தனிச்சொல் பெற்றுவந்த வெளிவிருத்தம். (எ-டு) : ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார்-ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார்-ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார்-ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார்-ஒருசாரார் இது நான்கடியாய் ஒரு சாரார்' என்னும் தனிச்சொல் பெற்று வந்த வெளிவிருத்தம். 6. மூன்றடியாய் ஈற்றடி வெண்பாவேபோல் முச்சீரடியான் இறுவது வெண்டாழிசை என்றும் வெள்ளொத் தாழிசை என்றும் வழங்கப்படும். எ-டு) : நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர். இது மூன்றடி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை, .