பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 55 7. மூன்றடிச் சிறுமையாய் ஏழடிப் பெருமையாய் இடையிடை நான்கடியாலும், ஐந்தடியாலும் ஆறடி யாலும் வந்து பின்பிற சில அடி சிலசீர் குறைந்து வருவன வெண் டுறை எனப்படும். முன்பிற சில அடி ஒரோசையாயும் பின்பிற சிலவடி மற்றோசையாயும் வருவன ஒருசார் வேற்றொலி வெண் டுறை எனக் கொள்க, (எ-டு) : தாளாளரல்லாதார் தாம்பல ராயக்கால் என்னாம் என்னாம் ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்ந்துவிழும் பிளிற்றி யாங்கே. இது மூன்றடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்துகந்த மாவாய் கிண்ட மணிவண்ண னைவர கூவாய் பூங்குயிலே!" - திருமங்கையாழ்வார் இது முதலடியும் ஈற்றடியும் ஒன்றாய் இருக்கும் வெண்டுறை. (எ-டு) : கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம் இல்லார் செல்வரைக்கண் டிணங்கியே யேமுற்றுால் இயைவ தென்னாம் பொல்லாதார் நன்கலன் மெய்புதைப்பப் பூண்டாலும் பொலிவ தென்னாம் 10. பெரி.திரு. 10.10:3