பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

திரு. இரா. காந்தி, மூத்த வழக்கறிஞர்,

சென்னை உயர்நீதி மன்றம்.

     ஓர் அறக் கட்டளைச் சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந் திருக்கிறது. சென்னைப் பல்கலைக் கழகமும், தமிழ் இலக்கியத் துறையும் சேர்ந்து நடத்திய நமது பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களுடைய கல்கி அறக் கட்டளை சொற்பொழிவினுடைய நூல் வடிவம்.
     
    பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கையும், அவர்கள் எழுதியுள்ள கட்டுரை களும், உரைநடைகளும் எண்ணிலடங்கா, முத்தாய்ப்பு வைத்தாற்போல், இந்த "இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்" என்ற அற்புதமான சொற்பொழிவை நூலாக வடித்திருக்கிறார்.
    
    தமிழ் இலக்கியத்தினுடைய 2500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் பிறமொழி தாக்குறவு பற்றி நூலாசிரியர் சிறப்பாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். மேலும் பண்டைய இலக்கணமான தொல்காப்பியத் திலிருந்து பண்டைய இலக்கியங்கள் பற்றியும் மற்ற இலக்கிய வேந்தர்களைப் பற்றியும் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். வடமொழியினுடைய சொற்கள் தமிழிலிலே கலந்து இருக்கின்ற காரணங்களைச் சொல்லுகின்ற பொழுது, ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையும், இராமாநுசருடைய விசிட்டாத்வைதக் கொள்கையும் பரவத் தொடங்கியபோது, வடமொழி கற்றவர்களின் தொகை பெருகியது என்கிறார். வட மொழியை 'தேவபாஷை' என்றும் 'நீசபாஷை' என்றும் தூற்றியும் கூறிய அன்பர்களையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.