பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} இலக்கிய வகையின் வளர்ச்சியும் 113 வரையுள்ள பதிகங்கள் கட்டளைக் கலித்துறை யாப்பாகிய திருவிருத்தப் பதிகங்கள். இரண்டு பாடல் களைக் காட்டுவேன். குணித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிழ்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே" வானம் துளங்கில்என்? மண் கம்பம் ஆகில்என்? மால் வரையும் தானம் துளங்கித் தலைதடு மாறில் என்? தண்கடலும் மீனம் படில்என்? விரிசுடர் விழில்என்? வேலைநஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே" என்று பாடல்களும் அநுபவித்து மகிழத் தக்கவை. இவ்வாறே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களின் தலைவராகிய நம்மாழ்வார் இறைவனை நொக்கி விண்ணப்பம் செய்யும் முறையில் அருளிய பனுவலாகிய திருவிருத்தம் (நம்மாழ்வாரின் முதல் பிர பந்தம்) என்பதிலுள்ள பாசுரங்கள் யாவும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. இரண்டு பாசுரங் களைக் காட்டுவேன். 15. தேவா 4.81:5 16. டிெ 4.1.12:8