பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இலக்கிய வகையின் வளர்ச்சியும் 2. இருசீரடி நான்காய் ஒருபொருள்மேல் ஒன்றாய் வருவது வஞ்சித்துறை. (எ-டு) : மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய் இது குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் தனியே வந்தமையால் வஞ்சித்துறை, மேலும், ஈசுவரன் ஆர்.ஜூவகுணமுண்டயவன்' என்பதை விளக்கும் ஓடும்புள்ளேறி (திருவாய் 1.8) என்ற திருவாய்மொழியும், ஆடியாடி அகம் கரைக்து' (திருவாய் 2.4) என்ற திருவாய்மொழியும், கண்ணன் கழலினை (திருவாய் 10.5) என்ற திருவாய்மொழியும் வஞ்சிவிருத்தங்களாகும். 3. சிந்தடி நான்காய் வருவதும் வஞ்சிவிருத்தம். (எ-டு) : சோலை யார்ந்த சுரத்திடை காலை யார்கழல் ஆர்ப்பவும் மாலை மார்பம் வருமாயின் நீலவுண்கண் இவள் வாழுமே. இது சிந்தடி நான்காய் வந்தமையால் வஞ்சிவிருத்தம் ஆயிற்று. (எ-டு): வண்டுனும்:(பெரி. திரு 6.1) என்ற திருமங்கை யாழ்வாரின் திருவிண்ணகர் பதிகமும் வஞ்சிவிருத்தம். மேலும், நம்மாழ்வார் அருளிச் செயல்களில் விடுமின் முற்றவும் (திருவாய் 1.2) என்ற பதிக்மும், பரிவதில்