பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 65 "ஈசனைப் பாடி'(திருவாய் 1.6) என்ற பதிகமும்,'ஆடியாடி’ (திருவாய் 2.4) என்ற பதிகமும் வஞ்சி விருத்தத்தால் அமைந்தவையாகும். இங்ங்னம், பாவினங்களின் வளர்ச்சியில் பல்வேறு வகைப் பாக்களின் இலக்கணம் எடுத்துக்காட்டு களுடன் விளக்கப் பெற்றன. 4. அடிவரையறை இல்லாத செய்யுள் வகை : தொல்காப்பியர் அடிவரையறை உள்ளனவாகக் குறிப்பிட்ட கால் வகைப் பாக்களையும் தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்களையும்மேலே கண்டோம். அடிவரையறை இல்லாதனவற்றை ஈண்டுக் காண் போம். அவை ஆறு வகைப்படும் என்று ಕೆ ஆசிரியர். அவை நூல், உரை, பிசி, அங்தம், முதுசொல், மந்திரம் என்பனவாகும். இதனை, அவைதாம், நூலினான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியினான ஏது நுதலிய முதுமொழியான மறைமொழி கிளந்த மந்திரத்தான கூற்றிடை வைத்த குறிப்பி னான' என்ற நூற்பாவால் விரித்தோதுவர். இவற்றை விளக்கு வோம். - (1) நூல் : நூல் என்பது இலக்கணத்தைக் குறிக் கும். அது சொல்ல வேண்டிய பொருள் தொடக்கம் முதல் முடியும்வரை மாறுபாடின்றி அமையத் தொகுத் தும், வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருளை 1. செய்யு. நூற். 158 இளம்) இ-5