பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ႏွစ္တို

   வெண்பாவினுடைய விளக்கங்களையும் நெடு வெண்பாடிவினுடைய விளக்கங்களையும் வெகு சிறப் பாக எடுத்துரைத்திருக்கிறார். வஞ்சிப்பா பற்றி ஆசிரியர் எழுதியிருப்பது அவரது ஆராய்ச்சித்திறனைக் காட்டுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம் முதலிய பக்திப் பனுவல்களிலிருந்து மேற்கோள் காட்டிய நூலாசிரியர், பிற்காலத்தில் வந்த இலக்கியவாதிகள், கவிஞர்களுடைய நூல்கனையும் இக்கால இலக்கியங்களை விளக்கும் போக்கில் காட்டி யிருக்கிறார். யாப்பு எப்படி ஒலி நயத்திற்குத் துணை புரிகிறது என்பதனை பாரதியாரின் பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா' என்ற பாடலின் மூலமும், பாரதிதாசனின் பெண்குழந்தை தாலாட்டு' என்ற பாடலின் மூலமும் சிறப்பாக விளக்குகிறார். கவிதைகள்உணர்சி பொங்க இருக்க வேண்டும் என்பதற்குப் பல பாடல்களை மேற்கோள்களாகக் காட்டி விளக்குகின்றார். கும்மிப் பாடல்கள் பற்றி பல மேற்கோள் காட்டி எழுதிய நூலாசிரியர் கி.பி. 7-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில் பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார்.நாயன்மார்கள் தம்முடைய பக்திப் பாடல்களில்இளங்கோ அடிகளைப் பின்பற்றி நாட்டுப் பாடல் களின் கூறுகளை அமைத்துப் பயன்படுத்தினார்கள் என்று ஆராய்ந்து எழுதியுள்ளார். பாரதியாருடைய பாடல்களை விரிவாக கூறியுள்ள நூலாசிரியர், அப் பெருமகனார் தமது பாடல்களில் குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார் என்று கூறி, புதிய ஆத்திசூடியையும், முரசுப் பாட்டையும் மேற்கோள் காட்டுகிறார்.
  குழந்தைக் கல்வி பற்றி எழுதுகிற நூலாசிரியர் தம்முடைய பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய அநுபவத்தைக் கொண்டு விளக்குகிறார். மேநாட்டு அறிஞர்களில் ரூசோ,பெஸ்டலாஸ்ஸி, ஃபிராபெல்,மாண்டிசாரி