பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

むむ இலக்கிய வகையின் வளர்ச்சியும் விரித்துரைத்தற்கேற்ற சொல்லமைப்போடு பொருத்தி நுண்பொருள்களை விளக்கும் பண்பினதாகும்.” நூலின் இயல்பினை விளக்கும் இரண்டு நூற்பாக்கள் மரபியலிலும் காணப் பெறுகின்றன. நூற்பாவின் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்த காண்டிகை உரையும், அதனை விளங்கக் கூறும் உரை வி க ற் ப மு. ம் உடையதாகிப் பத்துவகைக் குற்றமுமின்றி நுண் பொருளினவாகிய முபபத்திரண்டு உத்திகளோடு பொருந்தி வருவது நூல் என்று சிறப்பித்து உரைக்கப் பெறுவதாகும். அன்றி யும், நூற்பாவின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்தும், நூற்பாவின் பொருள்விளங்கக் காண்டிகை உரையினை இயைத்து உரைக்குமிடத்தும் இப் பொருளை இவ்வாறு கூறுதல் வேண்டும்' என்று விதித் தலும், இப்பொருளை இவ்வாறு கூறலாகாது’ என விலக்குதலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவனவும் நூலின் கண் கூட்டி உரைக்கல் பெறும்.* - இவ்வாறு அமைந்த நூல் சூத்திரம் (நூற்பா), ஒத்து, படலம், பிண்டம் என்று நான்கு வகையாக நடை பெறும் என்று நூலின் பாகுபாட்டை (அமைப்பை) விளக்குவர் ஆசிரியர். (2) உரை : தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இக்காலத்தில் நாம் உரை (Prose) என்று வழங்கும் நூல்கள் அவ்வளவாக இருந்ததில்லை. பண்டையோர் அனைத்தையும் செய்யுள் நடையா லேயே அமைக்கும் நெறியினைப் பின்பற்றி வந்த தாலும், இக்காலத்தில் உள்ளனபோல் எழுது கருவி 2. செய்யு - நூற். 159 3. மரபியல் - நூற். 100 (இளம்) 4. டிை - நூற். 101 (இளம்)