பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 67 களும் பிறவும் அக்காலத்தில் இல்லையாதலாலும் அக் காலத்தில் உரைநடைச் செல்வங்மள் அதிகமாக வளர வில்லை. இதுபற்றிய விளக்கங்களை உரைநடை வளர்ச்சி பற்றிக்கூறும் என் நூலில் கண்டு கொள்க." எனினும், ஒரு சிறிது வழங்கினவற்றை ஆசிரியர் தனது நூலில், பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்மர பில்லாப் பொய்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப." என்ற நூற்பாவால் விளக்குவர். இவற்றுள் 'பாட்டிடை வைத்த குறிப்பு’ என்பது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதி காரத்தில் இடையிடையே வரும் உரைநடையைப் போன்றது. பாவின்றெழுந்த கிளவி என்பது, உலக வழக்கில் பாட்டின்றித் தனியே வழங்கும் வசனநடை." 5. தமிழ் பயிற்றும் முறை (மூன்றாம் பதிப்பு) பக் 392-96, 6. செய்யு. நூற். 166 (இளம்) 7. சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் திரு. மு. அருண்ாசலம் என்பார். இன்றைய வசன நட்ை' (தினமணி வெளியீடு) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் 63 வகை உரை நடைகளைக் காட்டிக் கிண்டல் செய்கின்றார். நீண்ட நடையை தேர்வடத் தமிழ்’ என்றும் பார்ப் பனர் நடையை அம்மாமித் தமிழ்', 'அக்கிரகாரத் தமிழ்’ என்றும் கூறுவது இரண்டு எடுத்துக் காட்டுகள். அத் திம்பேர் அம்மாமி எனும் தமிழ் தான் மீதம் (தமிழ் நாட்டில் சினிமா) என்ற பாவேந்தரின் சொற்றொடரும் ஈண்டு நினைவுக்கு வருகின்றது.