பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

も8 இலக்கிய வகையின் வளர்ச்சியும் வழக்கின் கண் ஒரு பொருளைக் குறித்து வினவுவாரும் செப்புவாரும் கூறும் கூற்று என்பர் இளம் பூரணர். அதுவும் இலக்கணம்: பிழையாமற் கூற வேண்டுதலா னும், ஒரு பொருளைக் குரித்துச் சொல்லப்படுதலானும் செய்யுளாம் என்று பின்னும் விளக்குவர். பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி என்பது, ஒரு பொரு ளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவது; அஃதா வது யானையும் குருவியும் தம்முள் நட்பாடி இன்ன இடத்தில் இன்னவாறு செய்தன. ஒன்று அவற்றின் இயல்புக்கு ஒவ்வாத வகையில் இயைத்துரைக்கப் பெற்றுக் கதை யளவாய் வரும் உரைநடை. பொரு ளொடு புணர்ந்த நகை மொழி என்பது பொய்யெனப் படாது மெய்யெனப் படும் நகைப் பொருள் அளவாய் வருவது. அஃதாவது முழுதும் பொய்யென்று தள்ளப் படும் நிலையிலமையாது உலகியலாகிய உண்மை நிலையை ஒருவாற்றான் அறிவுறுத்துவனவாய்க் கேட்போருக்கு நகைச்சுவையை விளைவிக்கும் பஞ்ச தந்திரக் கதை போலுள்ள உரைநடை (3) பிசி : பிசி என்பது புதிர் அல்லது விடுகதை' போன்றது என்று கருதலாம். இஃது ஒப்புமைத் தன்மையோடு பொருந்திய உவமப் பொருளும், ஒன்று சொல்ல மற்றொன்று தோன்றும் துணிவுபட வரும் சொல் நிலையும் என்று இருவகைப்படும். ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே" ക്ഷജ്ജബ് - 8. பண்டைக்காலத்தில் வழங்கி வந்த சிறுகதைச் செல்வத்தை தான் இவ்வாறு ஆசிரியர் குறிப்பிட்ட தாகக் கொள்ளலாம். 9. செய்யு நூற். 159 (இளம்)