பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 73 பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத்தி திய்யே எ ன் ப து இதனையுணர்த்தும் நூற்பாவாகும். 'பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி' என்றார். அவையாவன : சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன என்பர் இளம்பூரணர். பாட்டிடைக் கலந்த பொருளவாகி' என்று ஆசிரியர் கூறுதலான, இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியன வாகச் சொல்லப் பெற்ற பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்கும் செய்யுளாகிய இவ்விசைப் பாடல் களுக்கு உரியன என்பதும், பாட்டு எனக்கூறாது 'பாட்டின் இயல்’ என்றமையால், இயற்றமிழ்ப் பாடல் களுக்கு உரியனவாக முற்கூறப்பெற்ற நோக்கு" முதலிய செய்யுளுறுப்புகள் சிலவற்றை இவ்விசைப் பாடல்கள் பெற்றே வருதல் வேண்டும் என்ற நியதி இல்லை என்பதும் நன்கு விளங்கும். இவண் கூறப்பெற்ற பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல்பினது என்ப்ர் ஆசிரியர். - "அதுவே தானும் பிசியொடு மானும்' என்ற நூற்பா இதனை உணர்த்தும். பிசி என்பது இரண்டடி யளவின் கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப் படும்’ எனவும், "கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” என்பது 'பிசியொடு ஒத்த அளவினதாகிப் பாலையா முென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமை T: செப்டுெ 173 (இளம்) 15. செய்யு. நூற். 174 (இளம்)