பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இலக்கியவகையின் வளர்ச்சியும் யின் பண்ணத்தி யாயிற்று' எனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் ஈண்டு நோக்கத் தக்கது. பண்ணத்தி என்னும் இவ்விசைப் பாடல்களின் அடியளவின் பேரெல்லை பன்னிரண்டு அடியாகும்; இவற்றின் அடி நாற்சீரினும் மிக்கும் குறைந்துவரினும் கடியப்படாது. இதனை, அடிநிமிர் கிளவி ஈராறு ஆகும் அடியிகந்து வரினும் கடிவரை யின்றே. * என்ற நூற்பாவினால் அறியலாம். மேற்கூறியவை யாவும் அடிவரையறையில்லாத செய்யுளின் விகற்பங்களாகும். அஃதாவது அவற்றின் அளவில் உணர்த்தப் பெற்றனவாகும். 5. வழிவழியாக வளர்ந்த வரலாறு : பண்டைக் காலத்தில் தமிழ் மொழியில் எண்ணற்ற வகையான இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றவேண்டும் என்பதை நாம் அறிவோம். எனவே, பண்டைய இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் அக்காலத்தில் வழங்கின செய்யுள் வடிவங்களின் இலக்கணம் கூறப் பெறுகின்றது. இலக்கணமும் இலக்கியமும் ஏற்பட்ட பிறகு புலவர்கள் பழைய செய்யுள் வடிவங்களைப் போற்றி வந்தார்கள். கலிப்பாட்டும் பரிபாட் லும் ஒருவகை நெகிழ்ச்சியான ஒலியமைப்பு பெற்றிருந்தமையால் அவை நாட்டுப் பாடல் வடிவத்தோடு ஒட்டி அமைந்த வடிவங்களாக இருந்திருக்க வேண்டும். அகப்பாடல் 16. செய்யு. நூற் 175 (இளம்) 17. செய்யுளின் பன்னிரண்டாம் உறுப்பு