பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 75 களைப்பாடுவதற்கு அவை உரியவையாகத் திகழ்ந்தன. எப்படியோ இவை செல்வாக்கு இழந்தன. வெண்பா வும் ஆசிரியப்பாவும் வாழ்ந்தன. அவையே இன்று வரை போற்றப் பட்டு வருகின்றன. சங்க இலக்கியத்திற்குப் பிறகு கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகட்குப் பிறகே வெண்பா செல்வாக்குப் பெற்றது, அக்காலப் புலவர்கள் நாட்டுப் பாடல்களில் வளரும் புதிய வளர்ச்சியோடு தொடர்பு கொள்ளாமல் பழைய செய்யுள் வடிவங்களையே பின்பற்றி வந்தார் கள். சிலப்பதிகாரத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதிய இளங்கோ அடிகள் நாட்டுப் பாடல்களின் பல வடிவங்களைத் தம் காவியத்தில் பல இடங்களில் கையாண் டுள்ளார். மங்கல வாழ்த்துப் பாடலை மயங்கிசைக் கொச் சக க் கலிப்பா என்பர் அடியார்க்கு நல்லார். கனாத்திறம் உரைத்த காதையையோ (சிலப். 9) கலிவெண் பாட்டு என்பர் அவர். வேட்டுவ வரியை (சிலப். 12) பல் தாழிசைக் கொச்சகக் கலிப்பா என்பர். ஆய்ச்சியர் குரலையையும் மயங்கிசைக் கொச்சகம் என இனங் காட்டுவர். வஞ்சினமாலை (சிலப் 27) ஐம்பத்தோரடி யால் அமைந்த கலிவெண்பாட்டு. வஞ்சின்ங்களை அடுக்கிக் கூறியதனால், வஞ்சின மாலை' எனப் பெயர் பெற்றது. துன்பமாலையும் (சிலப். 18) செய்யுளின் உறுப்புகளின் தொகுப்புபோல் அமைவதால் மாலை யாக அமைகின்றது. இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வாகும். ஊர் சூழ் வரியை (சிலப் 19) அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிபோ என்று வகைப் படுத்துவர் அடியார்க்கு நல்லார். குன்றக் குரவையைக் (சிலப் 24) கொச்சகக் கலிப்பா என்பர் அரும்பத உரைகாரர். வாழ்த்துக் காதையும் (சிலப் 29) அத்தகையதொரு கொச்சகக் கலிப்பாவாகக் கொள்ளு