பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இலக்கிய வகையின் வளர்ச்சியும் போதிலும் அதற்கும் வடமொழியின் செய்யுள் இலக்கணத்திற்கும் தொடர்பே இல்லை. விருத்தம் தமிழிலேயேவளர்ந்து அமைந்த அழகான செய்யுள் வடிவம். அகவல் முதலியவை போல ஒர் அடியில் நான்கு சீர் இருக்கவேண்டும் என்ற வறையரை இல்லை. நான்கு சீரும் இருக்கலாம். ஐந்து ஆறு. ஏழு, எட்டு எனப் பல சீரும் இருக்கலாம்; நாற்பது. சீரும் இருக்கலாம். ஆனால் கான்கே அடிகள் இருக்க வேண்டும்; முதல் அடியில் எத்தனை சீர்கள் வந்தனவோ, அத்தனை சீர்களே, அதே முறையிலே மற்ற அடிகளிலும் வரவேண்டும். சீர்கள் நீண்டும் இருக்கலாம், குறுகியும் இருக்கலாம். அதனால் விருத்தம் என்னும் செய்யுள் கணக்கற்ற வகையில் வேறுபடுவ தற்கு இடம் ஆயிற்று; பல வகை உணர்ச்சிகளுக்கு ஏற்றபடி பல்வேறு வகையில் சொற்கள் அமைந்து வெவ்வேறு ஒசைகள் பிறக்கவழி ஏற்பட்டது. ஆகவே, விருத்தம் உணர்ச்சிகளுக்கு ஏற்ற வடிவம் தருவதற்கு மிக நன்றாக உதவுகின்ற செய்யுள் வடிவம் ஆயிற்று. விருத்த காவியங்கள் : பல்வேறு வடிவங்களை மேற் கொண்டு மிகவும் செல்வாக்குப் பெற்ற விருத்தயாப் பினைப் பயன்படுத்திக் காவியம் இயற்றினால் அது பொதுமக்களிடம் மிகுந்த செல்வாக்குடன் திகழும் என்ற கருத்து திருத்தக்க தேவரின் மனத்தில் தோன்றியது. இந்தப் பெருநோக்கத்தின் அடிப்படை யில்தான் 'சீவக சிங்தாமணி’ என்னும் சமணக் காப்பியத்தை இயற்றினார். இதுதான் விருத்த யாப் பில் தோன்றிய முதல் காப்பியம் ஆகும். பின்னர்த் தோன்றிய கம்பர் தாம் இயற்றிய இராமகாதையில் விருத்தத்தின் எல்லையையே கண்டுவிட்டார்; விருத்த 1. விருத்தம்-விருத்தாந்தம் (அதாவது வரலாறு) கூறுவதிலிருந்து வந்ததாகக் கூறுவர்.