பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 79 மெனும் ஒண்டாவிற்கு உயர் கம்பன்' என்ற புகழும் பெற்றார். "கலிவிருத்தம்’ ஒன்றிலேயே சீர்களைச் சிலவேறு வகையாக மாற்றியமைத்துப் பல்வேறு ஒசைகளைப் படைத்தல் இயன்றது. கம்பநாடன் நான்கு சீர்களா லமைந்த இக்கலி விருத்தத்தில் ஏறக்குறைய அறுபது வகை ஓசை நயமுள்ள கவிதைகளை யாத்துள்ளார். அசை, சீர்கள் அளவில் இவை யாவும் கலி விருத்தம் என்றே வழங்கப் பெறினும் ஒசையால் வேறுபடுபவை. இங்ங்னமே கலித்துறை, அறுசீர் கழிநெடிலடி லாசிரிய விருத தம் முதலியவற்றிலும் சீர்களைப் பலவாறு வேறு படுத் தி அமைத்துப் பல்வேறு ஒசை வேறுபாடுள்ள பாடல்களை ஆக்கமுடிந்தது. ஒருவர் கம்பராமாயணத் திலுள்ள செய்யுள் விகற்பங்களைக் கணக்கிட்டு, வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்னூற்றாறே? என்று அறுதியிட்டுள்ளார். என் அருமை நண்பர். புதுச்சேரி டாக்டர் திருமுருகன் கம்பனின் வண்ணங்கள்' என்ற பெயரில் ஒர் அரிய ஆய்வு நூலை வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றார். பாவகைகள் எத்தனை வகையாயிருப்பினும் அத்தனை வகைகளின் மர்மங் களையும் இதயத் துடிப்புகளையும் நன்றாக இனிது உணர்ந்து அவற்றை அடக்கியாண்டுள்ளார். கம்ப நாடன். அறுசீர் விருத்தத்தை மட்டிலும் எடுத்துக் கொண்டால் எத்தனையோ வகைகளைக் காணலாம். பொன்னையேர் சடையான் கூறக் கேட்ட லும் பூமின் கேள்வன்' இஃது ஒருவகை. 2. கம்பராமாயணத் தனியன். 3. அகலிகை-73