பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8t; இலக்கிய வகையின் வளர்ச்சியும் கடலோ மழையோ முழுநீலக் கல்லோ காயா நறும்போதோ' இது பிறிதோரு வகை. குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் கொடையு மின்றி! என்பது மற்றொரு வகை. சீதப் பனிநீ ரளவித் திண்கா லுதவுக் கண்கால்" என்பது நான்காவது வகை. ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்திர் என்றாள்' என்பது ஐந்தாவது வகை. இங்ங் னம் பல. மேற்கூறியவற்றிலிருந்து கம்பன் தனது அரிய யாப்புத் திறனைக் காட்டுவதற்காக இங்ங்னம் வேறு படுத்தினார் என்று கருதுதல் தவறு. கவிஞன் கருத் தில் இசை செய்யுளின் கதியாக உருவெடுத்து வெளி வந்து ஒழுகுகின்றது என்றே கொள்ளுதல் வேண்டும். மேலும், கட்டங்களுக்குத் தக்கவாறும், அங்குக் கூற வேண்டிய கருத்துகளுக் கேற்பவும், விருத்தவகைகள் தாமாகவே மாறுவதுபோல் மாறி விடுகின்றன. எடுத்துக்காட்டாக இராமனுக்கும் இராவணனுக்கும் நிகழ்ந்த இறுதிப் போரைச் சொல்லி முடித்து இராமனது வாளியால் இராவணன் இறந்து பட்டான என்பதைக் கூறுமிடத்தில் விருத்த கதியை மாற்றி, 4. மிதிலை-65 5. நகர்நீங்கு-2 6. டிை-39 7. குகப். 67