பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இலக்கிய வகையின் வளர்ச்சியும் மிகுந்து, பொருள்களால் சிறந்து, ம்க்கள் வாழ்வை யொட்டி அவர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்தி இன்பம் நல்கத் தோன்றியவை யெல்லாம் பேரிலக்கியங் எ-டு) சிலப்பதிகாரம். மணிமேகலை( * في تي T قة تت கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவை இவற்றில் அடங்கும். அடிகளால் குறைந்து கற்பனை மிக்குக் கடவுளர் களையும், வெற்றித் திறத்தால் நாட்டுப் பரப்பைப் பெருக்கிய மன்னர்களையும், கொடை வன்மையாலும் பிறவற்றாலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்ற செல்வர்கள் இவர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இயற்றப்பெறும் இலக் கியங்களே சிற்றிலக்கியங்கள் என்ற பிரிவில் அடங்கும். பிரபந்தங்கள்’ என்ற வடசொல்லால் வழங்கப் பெறுவன எல்லாம் சிற்றிலக்கியத்தின் பாற் பட்டவை யாகும். சிற்றிலக்கியங்களின் பெருக்கம் : கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் சிற்றிலக்கியங்கள் வளரத் தொடங்கி நாளடைவில் பல வகையாய்ப் பல்கிப் பெருகியுள்ளன. இவை கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், தூது, குறவஞ்சி, பள்ளு, மடல், மாலை, காதல்" என்று பல்வேறுவகைப் பட்டவை களாகும். இவற்றுள் உலகியல் கடந்த கற்பனை நிகழ்ச்சி களும், புராணக் கதைகளும், உயர்வு நவிற்சியணி தளும், திரிசொல்லாட்சிகளும், இல்பொருள் உவமை 10. அல்லி அரசாணி மாலை, பவளக் கொடி மாலை, ஏணி ஏற்றம், நல்ல தங்காள் கதை போன்றவை இவற்றில் அடங்கும்.