பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 83 களும் நிறைந்து கற்பவர் உள்ளங்களைக் கவர்ந்து நிற்கும். இச்சிற்றிலக்கியங்கள் (சில்லறைப் பிரபந் தங்கள்) தொண்ணுற்றாறு வகைப்படும் என்று கூறும் மரபும் ஒன்று உண்டு. சிற்றிலக்கியங்கள் பற்றிய இலக்கணம் கூறும் நூ ல் க ளு ம் பிற்காலத்தில் எழுந்தவையேயாகும். பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற நூல்களே சிற்றிலக்கியங்கட்கு இலக்கணம் கூறும் நூல்களாகும். இதில் ஒரு விநோதம் என்ன வென்றால்,சமுதாயத் தில் சாதிக் கொடுமையை வகுத்து வைத்தது போல் எழுத்து இலக்கணத்திலும் அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்ற சாதி யாருக்கும் உரியவையாக எழுத்து களைப் பாகுபடுத்திக் கூறும் மரபும் எழுந்தமை கொடுமையிலும் கொடுமையாகும். தவிர, தேவர், மக்கள், விலங்கு, நரகர் என்னும் நால்வகைக் கதிகளுக் குரிய (கதி-நிலை) எழுத்துகளையும் வகைப்படுத்திக் காட்டும் நகைச்சுவையும் உண்டு.' இந்த இழிவழக்கு கற்றறிந்த புலவர்களின் 'அரிய செயலாகும். இடைப் பிறவரலாக வந்த இஃது இத்துடன் நிற்க. மேற்கூறிய இலக்கண நூற்களில் ஒன்றிலாயினும் 'பிரபந்தங்கள் தொண்ணுாற்றாறு’ என்ற வரையறை விரித்துத்தெளிவாகக்காட்டப்பெறவில்லை; அவற்றிற்கு இலக்கணமும் கூறப்பெறவில்லை; அவற்றில் கூறப் பெறும் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துகளுடன் மிளிர்கின்றன. தொண்ணுாற்றாறு என்ற வரையறைக் குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற்பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு,கோலாட்டப் பாட்டு, 1. பன்னிரு பாட்டியல்-5.8:13-8 நூற்பாக்கள்