பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苍生 இலக்கிய வகையின் வளர்ச்சியும் ஆனந்தக் களிப்பு, கிளிக் கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், காதல், ஏற்றப்பாட்டு முதலான பல சிற்றிலக்கியங்களும் உள்ளன. இவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன். பரணி : பரணி என்பது நாளின் ( = நட்சத்திரத் தின்) பெயராகும். பரணி நாளில், கொண்டாடப் பெறும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப் பாடப் பெற்றதால், பரணி என்ற நூலும் பெயர் பெற்று விட்டது. பரணி பிறந்தான் தரணி ஆள்வான்’ என்ற முதுமொழியும் எழுந்தது. போர்முகத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் பரணி” என வழங்கும் மரபும் உண்டு. வெற்றி பெற்றோனைச் சிறப்பிப்பதே பரணி நூல் என்ற வ ழ க் கு நிலை பெற்றிருந்தாலும், தோற்றோரைச் சார்ந்தே நூலுக்குப் பெயரிடப் பெறும் முறையும் பரணி நூல்களின் பெயரால் அறியக் கிடக் கின்றது. கலிங்கத்துப் பரணி" என்பது தோல்வியுற்ற கலிங்க மன்னனின் நாட்டின் பெயரால் அமைந்துள்ள தன்றோ? தக்கயாகப்பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி இவற்றில் தோற்று மாண்ட வீரர் களின் பெயர்கள் வந்திருத்தல் காணலாம். பரணி நூல் கள் கலிப்பாவின் ஒரு வகையான கொச்சகக்கலி என் னும் பாவின் உறுப்பாகிய ஈரடிக்கலித்தாழிசை என்ற உறுப்பே பரணிப் பனுவலுக்கு ஏற்றது என்று தேர்ந் தெடுத்துள்ளனர் கவிஞர்கள். சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாக பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பரவும்ஒலி கடல்ஒலிபோல் பரக்கு மாலோ’ -rسم مستعتبعیت میسیسم مس سهام ممته 12. கலிங், பரணி தாழிசை-109