பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 85 என்பது வீரர்கள் காளி தேவியை வழிபடும் முறையைக் காட்டுவது. பரணி நூல்கள் தாழிசையால் ஆக்கப்படும் என்பதைக் காட்டவே இந்த எடுத்துக் காட்டு. கோவை நூல்கள் பெரும்பாலும் கட்டளைக் கலித் துறை என்ற யாப்பால் இயற்றப்படும். திருக்கோவை யார் இங்ங்னம் இயற்றப்பெற்ற நூலாகும். அகப் பொருள் ஒழுகலாற்றினைப் பாடுவதற்குக் கலிப்பாவும் பரிபாடலும் ஆகிய இருவகைப்பாககளே சிறப்புரிமை உடையன என்று தொல்காப்பியர் கூறியுள்ளதை இப்பொழிவில் முன்னர்க் குறிப்பிட்டேன். ஆனால் கலித்தொகையும் பரிபாடலும் தவிர ஏனைய அகத் துறை நூல்கள் யாவும் ஆசிரியப்பாவின் யாப்பிலேயே இயற்றப் பெற்றுள்ளன. அகத்தினை ஒழுகலாறு களை ஒரு கோவைப்படத் தொகுத்துக் கோவைப் பிரபந்தம் பாட எண்ணிய பிற்காலச் சான்றோர் தொல் காப்பியர் கருத்தினைப் பின்பற்றித் தாம் எடுத்துக் கொண்ட கோவையினைக் கலிப்பாவின் இனமாகிய கட்டளைக் கலித துறை யாப்பில் அமைத்துப் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர். இந்தச் சிறப்புரிமையால் அதற்குக் கோவைக் கலித்துறை என்ற பெயரும் தோன்றி வழங்குவதாயிற்று.* கலிப்பாவின் இனம் எனப்படும் கட்டளைக் கலித்துறை யாப்பு காரைக்கால் அம்மையாரின் * 令 - 戀 * * - 学 திருவிரட்டை மணி மாலை'யில்தான் முதன்முதலாகக் T3. வீரசோழியம்-யா ப்புப் படலம் 17-ஆம் செய்யுள் உரையினை நோக்குக.