பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கைம்பெண்களாய அவர்கள். தம் இளமை வேட்கையை அடக்கும் ஆற்றலே இழந்து விட்டனர். மேலும், கல்வி யறிவு இன்மையால், தாம் செய்வது தவறு என்பதை அறியமாட்டாராயினர் . அதனல், அவருள் பலர் வாழ்க்கை யில் வழுக்கி வீழ்ந்தனர். -

பெண்ணுலகம், இவ்வாறு அறிவும், ஒழுக்கமும் அற்று வாழ்வே, அவர் அளித்த மக்களும் அங்கிலேயினராயினர். அதல்ை, உலகில் ஒழுக்கம் குன்ற, உலகியல் எல்லா வகையாலும் எள்ளி நகையாடற் குரியதாயிற்று. இவ் விரு நிலகண்டஞ்சிய உலகப் பேரறிஞர்கள், இச்சீர் கேட்டிற் கெல்லாம் காரணம், பெண்களின் இழிநிலேயே : ஆகவே, உலகம் ஒழுக்கம் நிறைந்து விழுப்பமுடையதாக ஆகவேண்டின், அப்பெண்களைப் பெருகிலையில் வைத்துப் பேணுதல் வேண்டும் என உணர்ந்தனர். இவ்வுணர்ச்சி, தமிழ் நாட்டுப் பெரியோர்கள் உள்ளத்திலும் உருப் பெற்றது. அதனல், பெண்ணுரிமை பேணும் பாக் களும், இளமைத் திருமண இழிவு, கைம்பெண் கொடுமை களக் கூறும் பாக்களும் பலப்பல எழுந்தன.

மாசிலா வையகத்து இவ்வுயிர் வாழ்க்கை ஆம் பெருங்கடலுள் போம் மரக்கலம்ை ஆடவர் நெஞ்சம், அறத்துறை அகன்று. நீள்திசை சுழற்றும் நிலையிலாக் காற்ரும் . கிண்ணயம் அற்ற எண்ணம் இயக்கச் சென்று.ழிச் சென்று, கன்றறிவின்றி அலையாவண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்தும் நங்கூரமாய், பின்னும் செய்வின் முயற்சியில் பொய்வகைப் புன்னெறிக்கு